
திருவொற்றியூரை சேர்ந்த ராஜா, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவன ஊழியர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை மனைவி பிரியா கண்டித்து தடுக்க முயன்ற போது ராஜா அவருடைய மனைவியை தாக்கியதாக கூறப்படுகின்றது
இதனால் கோபமடைந்த ராஜாவின் மனைவி பிரியா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் . புகாரின் பேரில் அவர்களின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், சுமார் ஒரு கிலோ கஞ்சாவை பொலிசார் பறிமுதல் செய்தனர். ராஜாவுடன் கஞ்சா விற்பனையில் உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஹரிஹரனும் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம், ஐ.டி. ஊழியர்கள் கஞ்சா விற்பனைக்குள் சிக்கியிருப்பது குறித்து பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.