
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேல் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளில் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு தற்காலிக போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு, பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது.
ஆனால், கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து, மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு பேசும்போது, “ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க காசா பகுதி முழுவதும் ஒரு புதிய பாதுகாப்பு வழித்தடத்தை இஸ்ரேல் உருவாக்கும்” என்று அறிவித்தார்.
இதன்மூலம் தெற்கு நகரமான ரபாவை பாலஸ்தீனத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்க முடியும் என்றும், அதன்மூலம் ஹமாஸ் போராளிகளை பணிய வைக்கலாம் என்றும் கூறியிந்தார்
இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து நேற்று இரவு காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில், இஸ்ரேல் கடுமையான வான்தாக்குதலை நடத்தியதுள்ளது
இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் உட்பட 9 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற இந்த தாக்குதல்களால், பாலஸ்தீனில் உள்ள பொதுமக்களுக்கு பரிதாபமாக உயிரிழப்பதற்கு நடவடிக்கை எடுக்கவெண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்