
பட்டாலி மக்கள் கட்சியில் (பா.ம.க.) உள்ளே குழப்பங்கள் தீவிரமடைந்து வருகிறது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் தற்போதைய கட்சி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இது தற்போது நாளுக்கு நாள் மேலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் கட்சியின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று தொடங்கிய இந்த ஆலோசனை இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பா.ம.க. நிர்வாகிகள் பங்கேற்று முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
மேலம் குறித்த ஆலோசனை கூட்டங்களில் அன்புமணியின் வருகையை முன்னிட்டு, பா.ம.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் , கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் இந்த கூட்டங்கிளில் பங்கேற்றுள்ளமையும் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது . ஒரு காலத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர், தற்போது அன்புமணி பக்கம் வந்து அவருக்கு ஆதரவை தெரிவிப்பதே இதற்கான காரணம்.
சமீப காலங்களில் அன்புமணியை ஆதரித்து பேசிய பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை கண்டித்தவர் வடிவேல் ராவணன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அதே திலகபாமாவுடன் ஒன்றாக மேடையை பகிர்ந்திருக்கும் அவர், கட்சி தலைமையின் பக்கம் திரும்பியுள்ளதை தெளிவாக காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
அத்துடன் , பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் இந்த ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடதக்கது