
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மிக புத்திசாலியான மனிதர் என பொதுவெளியில் பாராட்டியுள்ள சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது
டிரம்ப் தனது அதிரடி வரி விதிப்பு நடவடிக்கையை நீடிக்க உள்ளதாகவும், நட்பு நாடுகள் கூட அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பாதிக்க முடியாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து வரும் சூழலில் நரேந்திர மோடியை இவ்வாறு பாராட்டியுள்ளார்
நியூ ஜெர்சிகான அமெரிக்க வழக்கறிஞர் அலினா ஹப்பாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற டிரம்ப், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்தியாவுடன் தன்னுடைய உறவு குறித்து விமர்சனத்துடன் கூடிய பாராட்டுகளை வெளியிட்டார்.
இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவுகள் உள்ளதாக கூறிய டிரம்ப், அதே நேரம் இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை இந்தியா அதிக வரியை விதிப்பது தான் என தெரிவித்துள்ளார்
மேலும் அவர் பேசும் போது இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். ஆனால், அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர். இது குறித்தும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஏப்ரல் 2 ம் தேதி முதல், அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே அளவு கட்டணங்களை நாமும் அவர்களிடம் வசூலிப்போம்” என என தெரிவித்துள்ளார்
அதே நேரம் நரேந்திர மோடியும் நானும் நல்ல நண்பர்களாக உள்ளோம் . பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்திருந்தார். அவர் மிகவும் புத்திசாலியான மனிதர். இந்தியாவுக்கான சிறந்த பிரதமராக மோடி இருக்கிறார் என்று நான் கூற விரும்புகிறேன்” என மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்
இந்தியாவை கடுமையாக விமர்சித்தாலும், மோடியின் தலைமைக்கு புகழாரம் சூட்டியுள்ள டிரம்ப், இந்தியாவும் அமெரிக்காவுடன் சமத்துவமான வரி விதிப்பு நடைமுறையில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.