அதிகரிக்கும் எம்.பி.களின் சம்பளம் – மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா !?

அதிகரிக்கும் எம்.பி.களின் சம்பளம்… மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

காலத்திற்கேற்ப பொருள்களின் விலைகள் மட்டுமல்லாமல் எம்பிகளின் மாத சம்பளமும் உயர்த்தப்பட்டு வருகிறது, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிகளுக்கான மாத சம்பளம் 24% சதவீதம் உயர்த்தப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதல் எம்பி முதல் தற்போது வரை உள்ள எம்பிகளின் சம்பள விவரங்கள்:

1952ஆம் ஆண்டில் எம்பிகளின் மாத சம்பளம் – ரூ.500 வழங்கப்பட்டது, 1986ஆம் ஆண்டில் -.5,000 ரூபாயாகவும் ,2004ஆம் ஆண்டில் 16,000 ரூபாயகவும் வழங்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு இந்த தொகை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு 50,000 ரூபாயாக வழங்கப்பட்டது.

இதையெடுத்து 2018ஆம் ஆண்டு இந்த தொகை ரூ.100000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த சம்பளம் மேலும் 24%, உயர்த்தப்பட்டு 1,24000 ஆக வழங்கப்படும். மற்றும் தினசரி கொடுப்பணவு தொகையும் 2000லிருந்து, ரூ2500 ஆக உயர்த்தப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் மற்றும் கொடுப்பணவுகளை தானாக மாற்றி அமைக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி ஒரு எம்பிக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.

  • எம்.பி.க்களும், அவர்களது குடும்பத்தினரும் ஆண்டுக்கு 34 முறை உள்நாட்டு விமானங்களில் இலவசமாக பயணிக்கலாம்.
  • வேலை நிமித்தமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ரயில்களில் பயணித்தால், முதல் வகுப்பு பெட்டியில் நாட்டின் எந்த பகுதிக்கும் இலவசமாக பயணிக்கலாம்.
  • டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு வாடகையில்லா பங்களா அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒதுக்கப்படுகின்றன. இவை வேண்டாம் என்றால், அதிகபட்சமாக மாதத்திற்கு ரூ.2 லட்சம் வரை வாங்கிக் கொள்ளலாம்.
  • ஆண்டுக்கு 50,000 யூனிட் வரை இலவச மின்சாரமும், 4,000 லிட்டர் இலவச குடிநீரும் வழங்கப்படுகிறது.
  • அத்துடன், எம்.பி.க்களும், அவர்களது குடும்பத்தினரும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ளலாம், இதன் மூலம் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ சிகிச்சை பெறலாம். இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகள் எம்பிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தான் எம்பிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன.