திருப்பத்தூரில் சுவர் இடிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

"Scene of a collapsed wall in Thirupathur where a 10th-grade student tragically lost their life."


திருப்பத்தூர் மாவட்டம் செங்கிலிகுப்பம் கிராமத்தில் சோகமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு படித்துவரும் வெற்றி என்ற மாணவர், தனது பழைய குடிசை வீடு இடிக்க முயன்ற போது சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த வெற்றியை, அவரது தாயார் ஹோட்டலில் வேலை செய்து வளர்த்துவருகிறார். சமீபத்தில் புதிய வீடு கட்டுவதற்காக பழைய குடிசையை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு வெற்றி தனது வீட்டை தனியாகவே இடிக்க முயன்யுள்ளார். அந்த நேரத்தில் சுவர் திடீரென இடிந்து விழுந்து, அவரது மீது விழுந்ததால் வெற்றி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டு பொதுமக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தும் அவர் உயிரிழப்பதை தவிர்க்க முடியவில்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.