
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நிஜாம் என்பவரின் மகன் ரியாஸ் (5) நேற்று இரவு தாத்தா, பாட்டி வாங்கிக் கொடுத்த ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டுள்ளார். பழத்தை சாப்பிட்ட சில நிமிடங்களில் அதன் விதை தவறி தொண்டையில் சிக்கிக் கொண்டு ரியாஸ் மூச்சுத் தடுமாற ஆரம்பித்துள்ளார்.
உடனே அதனை பார்த்த உறவினர்கள் அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியிலேயே ரியாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.