
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தூக்க கலக்கத்தில் மினிவேனை இயக்கிய ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்ததால், வலது புறம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதினார்.
இந்த விபத்தில், மினிவேனில் பயணித்த பூர்ணா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 8 வயது சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தால் மினிவேன் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.