
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்த விஸ்ருத் மற்றும் சுருதி காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தினரிடம் ஏற்பட்ட தகராறால் சுருதி காயம் அடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை விஸ்ருத் மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சையில் இருந்த தனது மனைவி சுருதியை திடீரென கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கணவர் விஸ்ருத்தை பிடிக்க விரிவான தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம், குடும்ப தகராறு, மருத்துவமனையில் நடந்த கொலை என இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.