மனைவியைக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்த கணவன்: பெருங்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

"Husband kills wife and hides body in garbage dump — shocking crime revealed"

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த நவீன் என்பவர், தனது மனைவி லட்சுமி செல்போனில் வேறு ஆளுடன் தொடர்ந்து பேசி வருவதாக சந்தேகித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த நவீன், லட்சுமியை கொலை செய்து உடலை அருகிலுள்ள குப்பைக் கிடங்கில் புதைத்துள்ளார்.

பின்னர் மனமுடைந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்த நவீன், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் சுட்டிக்காட்டிய இடத்துக்கு போலீசார் சென்றபோது, லட்சுமியின் உடலை தோண்டியெடுத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.