
ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் கோரி நடைபெற்ற கருத்தரங்கில், இந்து கடவுள் ராமனை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மயிலாப்பூரில் ஆணவப்படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையுடன் கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்து கடவுள் ராமனை குறித்த தனது பேச்சால் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அவர் கூறியதாவது:
“தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்றார். பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன். ஆணவப்படுகொலைகளின் பின்னால் சனாதன கோட்பாடே காரணம். அந்த கோட்பாடு தான் வர்ணாசன கோட்பாடு. அந்த கோட்பாட்டை நாம் அழிக்க வேண்டும் என அம்பேத்கர் கூறியுள்ளார். இந்து மதத்தில் சமத்துவமோ சமூகநீதியோ இல்லை என்பதால், மக்கள் மதம் மாறுகிறார்கள்.
ராமன் பார்ப்பனர் அல்ல, ஆனால் பார்ப்பனர்களுக்காக இப்படிச் செய்கிறார். அதுபோல் ராமதாஸும் பார்ப்பனர் அல்ல, ஆனால் பார்ப்பனர்களின் கருத்தியலுக்காகவே படுகொலை செய்ய தூண்டுகிறார். இருவரும் ஒன்றே. இதன் தொடர்ச்சியாக இன்றும் அந்த கருத்தியலை பலர் உள்வாங்கிக் கொள்கிறார்கள்” என வன்னி அரசு பேசியதாக கூறப்படுகிறது.
இந்த உரை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.