உயர் ரக OG கஞ்சா விற்ற உதவி இயக்குநர் கைது – சென்னையில் அதிர்ச்சி!

"Assistant Director arrested in Chennai for selling high-quality OG ganja, sparking public outrage."

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதால் திரையுலகம் பரபரப்பில் மூழ்கியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தில் உதவி இயக்குநராக இருந்த ஸ்ரீ பிரேம்குமார், மலேசியாவை சேர்ந்த அஸ்லம் என்ற நபர் மூலம் உயர்ரக OG கஞ்சா வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதை தன் வீட்டில் பொட்டலங்களாக்கி, அஸ்லம் குறிப்பிட்ட நபர்களுக்கு விற்பனை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கஞ்சா விற்பனை தொடர்பாக ஸ்ரீ பிரேம்குமார் மற்றும் அவருடன் இருந்த நண்பர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.