கர்ப்பிணி பெண்ணை தாக்கிய தலைமை காவலர் கைது : 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு! 

Police officer arrested after allegedly assaulting a pregnant woman; legal case filed under three sections.


திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவத்தையடுத்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில், காவலர் ராமன், பெண்களை தரக்குறைவாக பேசி, தாக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளது.

இந்த வீடியோ ஆதாரமாக வைத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, தலைமை காவலர் ராமன் மீது பெண்களை இழிவாக பேசியது, உடல் காயம் ஏற்படுத்தியது மற்றும் அதிகார துஸ்பிரயோகம் செய்தது என மூன்று தனித்தனி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், இவர் மீது உடனடியாக பணியிடை நீக்கம் விதிக்கப்பட்டது. இன்று அதிகாலை காவல்துறையினர் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.