
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவர், வயிறு வலி காரணமாக ஓய்வறைக்கு செல்ல வகுப்பு ஆசிரியர் சுபாஷிடம் அடிக்கடி சிகிச்சைக்காக அனுமதி கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் சுபாஷ், கையில் இருந்த வாட்டர் பாட்டிலால் மாணவனின் தலையில்ஓங்கி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் மாணவனது தலையில் ரத்தம் வெளியேறியதோடு, அதைக் கண்ட மாணவர்கள் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனுக்கு முதற்கட்ட மருத்துவ உதவிகளை வழங்கினர். இது தொடர்பாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவனின் பெற்றோர் எழுப்பிய புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.