
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சுண்டக்காபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் வகுப்பு ஆசிரியர் தங்கவேல் (43) மீது 5 மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
4 மற்றும் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் தங்களிடம் ஆசிரியர் தவறான முறையில் நடந்துகொள்வதாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தங்கவேல் மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்பட்டி சேர்ந்த தங்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.