சடலத்தை மாற்றிகொடுத்த அரசு மருத்துவமனை – உறவினர்கள் போராட்டம்

Relatives protest after government hospital gives wrong body

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணையை அடுத்துள்ள பூச்சிரெட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து உயிருக்கு போராடி வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர்,  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆனால், அவரது உடல் நிலை மோசமடைந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்ததையடுத்து, வழமையான பிரேத பரிசோதனை நடைபெற்ற பின்னர் மருத்துவமனை நிர்வாகம், ராஜேந்திரனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது  

 ஆனால், அந்த உடல் வடமாநிலத்தை சேர்ந்த வேறொரு நபரின் உடலாக இருப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

பின்னர் வைத்தியசாலையில் சென்று கேட்ட போது , ராஜேந்திரனின் உடல் தவறுதலாக பீகார் மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது 

 இந்த தகவல் அறிந்த உறவினர்கள்   ஆத்திரமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் முற்றுகைaிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். 

“உயிரிழந்த எமது உறவினர்  உடல் எங்கே?” என  கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்

தற்போது பீகாருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட ராஜேந்திரனின் உடல் மீண்டும் திருவள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 உறவினர்கள், இந்த பிழைக்குப் பொறுப்பானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.