அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – உடற்கல்வி ஆசிரியர் மீது புகார்!

A physical education teacher at a government school has been accused of sexually harassing girl students — complaint filed, investigation underway.

ஒசூரை அடுத்த மதகொண்டப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக மோகன்குமார் பணியாற்றி வந்தார். அவர் சில மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலத் துறையினர் நேரில் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் மோகன்குமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமாரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.