
மதுரையிலிருந்து குற்றாலம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று இன்று காலை பயணித்தபோது, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள இடைகால் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது
வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த சங்கரன் (வயது 55) என்பவர் ஓட்டிச் சென்ற அந்த அரசு பஸ், மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென பின்பக்க சக்கரங்களின் அச்சு முறிந்துள்ளது
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது.
எனவே பஸ்சின் பின்பக்கம் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் உள்பட பஸ்சில் இருந்த 40 பயணிகளும் பஸ்சின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே ஆய்க்குடி போலீசார் விரைந்து சென்று மாணவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவத்தின்போது பின்னால் வேறு வாகனங்கள் வராததால் பெரிய விபத்து தவிர்த்துவிட்டதென போலீசார் தெரிவித்துள்ளனர்