அட்சய திருதியை தினத்தில் தங்க விலை நிலவரம்!

அட்சய திருதியை தினத்தில் தங்க விலை நிலவரம்!

அட்சய திருதியை தினமான இன்று, தங்க நகை வாங்கும் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நகைக்கடை உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் 

அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில், வழக்கமாக இந்த நாளில் அதிகளவான மக்கள் நகைக்கடைகளில் திறன்டு நகைகளை வாங்குவது வழக்கம்

இதனால் தமிழ்நாட்டில் இன்று அதிகாலை 5 மணிக்கே பல நகைக் கடைகள் திறக்கப்பட்டன.மேலும் நகைகளுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், வாடிக்கையாளர்களின் அளவு கணிசமாக இல்லையென தெரிவிக்கப்படுகின்றது 

 கடந்த ஆண்டு மார்க்கெட்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு முன்பதிவுகளும் விற்பனையும் குறைவாகவே நடந்ததாகவும் அதிக விலையால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்ததாகவும், சிலர் குறைந்த எடையிலான நகைகளையே வாங்கி சென்றதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கமானது இன்று கிராமுக்கு ரூ.8,980, பவுனுக்கு ரூ.71,840 க்கும் விற்கபடுகின்றது . இந்த விலை நிலவரம் தான் வாடிக்கையாளர்களை மட்டுப்படுத்தியதாகவும்  நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதே மக்கள் நம்பிக்கை. இருப்பினும், விலை உயர்வு, வேலை நாள் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு விற்பனை சற்று மந்தமாக  நடைபெற்றதாக கூறப்படுகிறது