
சென்னையில் ஆபரன தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த 26-ந் தேதி முதல் உயரத் தொடங்கியது
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,360-க்கும், ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனை செய்யப்பட்டிருந்தது
இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று திங்கட்கிழமை கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது
அதாவது ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.8,425-க்கும், ஒரு சவரன் 520 ரூபாய் அதிகரித்து ரூ.67,400 – க்கும் விற்பனை செய்யபடுகின்றது
எனினும் வெள்ளி விலையில் எந்த மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.113-க்கும் விற்பனையாகிறமை குறிப்பிடதக்கது