ஒரேநாளில்இரண்டாவதுமுறையாகஅதிகரித்ததங்கத்தின்விலை!

ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்த தங்கத்தின் விலை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் தங்க விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்ற கவலையில் பொதுமக்கள் உள்ளனர்.

வாரத்தின் தொடக்க நாளான நேற்று, தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.71,200 ஆகவும், ஒரு கிராம் ரூ.8,900 ஆகவும் விற்பனையானது.

ஆனால் இன்று காலை தங்கத்தின் விலை  ஒரு கிராமுக்கு ரூ.250 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,025-க்கும், சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.72,200 ஆக விலை தீர்மானிக்கப்பட்டது.

இப்போது மீண்டும் தங்கத்தின்  விலை அதிகரித்து, சவரனுக்கு மேலும் ரூ.600 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் தற்போது சவரனுக்கு ரூ.72,800 ஆகவும், ஒரு கிராம் ரூ.9,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுவரை இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதால், பொது மக்களும், முதலீட்டாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தங்க விலையுடன் இணைந்து வெள்ளி விலையும்  கிராமுக்கு ரூ.3 உயர்ந்து தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.111 ஆக விற்பனையாகிறது. அதேபோல், பார் வெள்ளி ரூ.3,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,11,000 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இந்த விலை உயர்வின் காரணமாக, நகை வாங்கும் நபர்கள் மற்றும் தங்க முதலீட்டாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்