
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த 150 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை, ஆடு மற்றும் மாடுகளுக்கான விற்பனையால் மாநிலம் முழுவதும் பிரசித்தி பெற்றது.
மலைப்பகுதிகளில் இயற்கை தழைகள் மேய்ந்து வளரும் செஞ்சி வெள்ளாடுகள் சிறப்பாக வளர்க்கப்படுவதால், அவற்றுக்கு தமிழ் நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து விற்பனை செய்கிறார்கள்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இன்று அதிகாலையே சந்தை பரபரப்பாக இருந்தது. காலை 3 மணி முதல் விவசாயிகள், ஆடு வளர்ப்பவர்கள் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் தங்களது ஆடுகளுடன் சந்தைக்கு வந்ததோடு ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க வாகனங்களில் திரண்டனர்.
இந்த வார சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. பக்ரீத்
ஒரு ஜோடி வெள்ளாடுகள் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை, செம்மறியாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்க்கப்பட்டுள்ளன
மொத்தமாக இந்த சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.