80 வயது மூதாட்டிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: கடலூரில் அதிர்ச்சி சம்பவம் 

Elderly 80-year-old woman gang raped in Cuddalore, Tamil Nadu – horrifying case sparks outrage.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா என்ற 80 வயது மூதாட்டி, அப்பகுதியிலுள்ள புலவனூர் சாலையில் தினசரி காலை, மாலை நடைபயிற்சி செய்வது வழக்கமாக இருந்தது உள்ளது.

போன சில நாட்களுக்கு முன்பு, வழக்கம்போல நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, சாலையோரம் மதுபோதையில் இருந்த நான்கு இளைஞர்கள், கௌசல்யாவை கட்டாயமாக அருகிலுள்ள சவுக்கு தோப்பிற்குள் இழுத்துச் சென்றுள்ளனர். 

மூதாட்டி சத்தம் போட முடியாமல் தடுக்க, அவருடைய வாயில் மண்ணை கொட்டியுள்ளதோடு, பின்னர் அந்த நான்கு பேரும் அந்த மூதாட்டியை மிருகத்தனமாக  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு, மூதாட்டியின் கழுத்தில் இருந்த சுமார் ஒரு சவரன் தங்க சங்கிலியையும் பறித்து கொண்டு, அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்கவும், சிசிடிவி மற்றும் தொலைபேசி தகவல்களை கைப்பற்றி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூதாட்டி மீது இந்த அளவிற்கு கொடூரமான தாக்குதல் நடந்திருப்பது சமூகத்தின் மனிதநேய சிந்தனையையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.