
சென்னையில் (மார்ச் 25) ஆம் தேதி நடைபெற்ற தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் மூளையாக ஈடுபட்ட குற்றவாளி ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆணையராக அருண் பொறுபேற்ற பிறகு, திருவேங்கடத்தில் தொடங்கி காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா தற்போது குலாம் வரை ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடந்துள்ளன.
சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்க்கும் போது ரவுடிசத்தை கட்டுப்படுத்துவதே தனது முதன்மையான வேலை, மேலும் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் கட்டுபடுத்துவேன் என கூறியிருந்தது குறிப்பிடதக்கது.
திருவேங்கடம் முதல் குலாம் வரை
- முதல் என்கவுண்டராக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம், சாட்சியங்களை சேகரிக்க அழைத்துச் சென்றபோது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவலரை தாக்க முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
- இரண்டாவது என்கவுண்டராக 60க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட வரலாற்று குற்றவாளியான காக்காத்தோப்பு பாலாஜி,காரில் சென்று கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த காவலர்களை துப்பாக்கியல் சுட முயற்சித்ததால், பாதுகாப்பிற்க்காக பதில் தாக்குதல் நடத்தும் போது என்கவுண்டர் செய்யப்பட்டார்..
- மூன்றாவது என்கவுண்டராக ஆந்திராவில் கைது செய்யப்பட்டு தமிழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பிரபல ரவுடியான ‘சீசிங்’ ராஜாவும் இதே போல சாட்சியங்கள் சேகரிக்க சென்ற இடத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
- சென்னையில் (மார்ச் 25) ஆம் தேதி நடைபெற்ற தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை, 4 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட குலாம், பதுக்கி வைத்த நகைகளை மீட்பதற்காக அழைத்துச் சென்ற போது, தப்பி செல்ல முயற்சித்ததாகவும், அவன் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியால் காவலரை சுட முயற்சித்ததாகவும் கொள்ளைக்காரன் ஜாபர் குலாம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
என்கவுண்டர்கள் எதுவும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல குற்றவாளிகள் காவலர்களை தாக்கும் போது தற்காப்பிற்காக பதில் தாக்குதல் நடத்தும் போது நடைபெறுவது என என்கவுண்டர் குறித்து சென்னை காவல் ஆய்வாளர் அருண் கூறியுள்ளார்.