
தமிழகத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து கொடூரக் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதாக சூட்டிகாட்டய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் இருவரும் மாயமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கடும் அதிர்ப்தியை தெரிவிதுள்ளார்
“தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கில் இன்னும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில், கொங்குப் பகுதியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இத்தகைய கொடூரச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தையும், சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் இருக்கின்றன,” என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், இது திராவிட மாடல் ஆட்சியின் தோல்வியைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொடூரக் கொலை சம்பவத்தில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யும் பணியை தீவிரமாக மேற்கொள்வதுடன், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை புனரமைக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வேளையில், உயிரிழந்த தம்பதியரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.