
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கம் வகையில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற த்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 முக்கிய பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதில், பலர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வந்த கடும் பதற்ற சூழ்நிலையில், பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.
பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் உத்திகள், பாதுகாப்பு வலுப்படுத்தல், வருங்கால நடவடிக்கைகள் ஆகியவற்றை முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களுடன் பிரதமர் தொடர்ந்து ஆலோசித்து வந்தார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களாகவே எந்தவொரு சமூக ஊடகத்திலும் கருத்தும் வெளியிடாமல் இருந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு நேரடியாக உரையாற்ற உள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்புதல் எட்டப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். அதேபோன்று, இப்போது பிரதமர் மோடி உரையாற்ற உள்ளமை முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக மாறியுள்ளது.
இந்த உரையில் அவர் எதை முன்னிறுத்துகிறார், நாட்டுக்கு என்ன செய்தியைக் கொடுக்கிறார் என்பது நாடு முழுக்க தீவிர கவனத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.