
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளால் நடைபெற்ற தாக்குதல் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகைகள் முழுமையாக நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன.
மொத்தம் 259 இடங்களில் போர்க்காலக் கட்டமைப்பை பின்பற்றி ஒத்திகைகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே சில வட மாநிலங்களில் பயிற்சிகள் துவங்கியுள்ளன.
தமிழகத்தில் இன்று முக்கியமான இடங்களான சென்னை துறைமுகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கத்தில் இந்த ஒத்திகைகள் நடைப்பெறுகின்றன.
மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அறிவிப்பின்படி, இந்த ஒத்திகை இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது.
சென்னை துறைமுகத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிகளுடன் அணிவகுப்பு நடத்தினர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையை கையாளும் வகையில் மேலாண்மை நடவடிக்கைகள் சோதிக்கப்படும் வகையில் சிறப்பாக ஒத்திகை நடைப்பெற்றது.
இது மட்டுமல்லாமல், புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையில் போர் சூழலை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது. ஒத்திகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மைத் துறை, பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து பங்கேற்றனர்.