இலங்கையில் இருந்து வந்த 5 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்! 

Five individuals from Sri Lanka take refuge in Rameswaram, Tamil Nadu.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில்,  ஒரு குடும்பம் உயிர்ப்பிழைக்க கடல் கடந்து  தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள சம்பவம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் தமிழகத்தில் தஞ்சம் கோரி  தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்

பால் பவுடர், மருந்துகள் மற்றும் குழந்தைகளுக்கான உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை உருவானதால், அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து பைபர் கிளாஸ் படகில் ராமேஸ்வரத்தை நோக்கி சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பயணிதுள்ளதாக தெரிவித்துள்ளனர்

இன்று அதிகாலை ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல் முனை வடக்குப் பகுதியில் அவர்கள் கரையிரைங்கியுள்ளனர் .

அந்த நேரம் கடலோரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மயக்க நிலையில் இருந்த குழந்தைகளை கவனித்து, உடனடியாக மரைன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் இந்த ஐந்து பேரும் தனுஷ்கோடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

விசாரணையின் போது: “குழந்தைகளுக்கான நகையையும் கழுத்திலிருந்த செயினையும் விற்றுவிட்டோம். அன்னம் கிடைத்தாலே போதும் என்பதற்காக உயிர் பாதுகாப்பை மறந்து கடல் கடந்து வந்துள்ளோம். எங்களை விட்டுவிடுங்கள், வாழ மட்டும் நினைக்கிறோம்.”

தற்போது மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் அவர்களிடம் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது