2025-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம், இந்தியாவில் ஏன் காணமுடியவில்லை !?

First Lunar Eclipse of 2025 Why Was It Not Visible in India

மார்ச்14 அன்று நடைபெற்ற முழு சந்திர கிரகத்தின் போது நிலவு அடர் சிவப்பு நிறமாக மாறியது, இந்த நிகழ்வை ”இரத்த நிலவு” என்று அழைக்கிறார்கள். இந்த நிகழ்வு உலகின் பல பகுதியில் தெரிந்தது என்பதால், வானியல் ஆர்வலர்கள் பலரும் இந்த நிகழ்வை ஆவலுடன் கண்டுகளித்தனர்.

சந்திர கிரகணம் எப்படி நடைபெறுகிறது

பூமி சூரியனுக்கும்,சந்திரனுக்கும் இடையில் வந்து,அதன் நிழல் சந்திரனை மறைக்கும் போது முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. அதாவது சந்திரனுக்கு என்று தனி ஒளி இல்லை,சந்திரனின் மேற்பரப்பு பகுதியில் சூரியனின் கதிர்கள் பிரதிபலிப்பதால்,சந்திரன் பிரகாசமாக காட்சியளிக்கிறது. தற்போது பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் வந்து  நேரடி சூரிய ஒளி சந்திரனை  அடைவதை தடுக்கும்  நிகழ்வே சந்திர கிரகணமாகும்.மேலும் சந்திர கிரகணம் பெளர்ணமி காலத்திலே நடைபெறும்.

ஏன் இரத்த நிலவு என்று அழைக்கிறார்கள்?

சந்திர கிரகணத்தின் போது பூமி, சந்திரனுக்கு செல்லும் சூரிய ஒளியை தடுத்தாலும், சந்திரன் கண்ணுக்கு தெரியும். ஏனெனில் பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை வளைத்து  மறைமுகமாக சந்திரனின் மேற்பரப்பில் ஒளிர செய்கிறது. சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்லும் போது பூமியின் மேற்பரப்பை நோக்கி ஒளிவிலகல் அடைகிறது, மேலும் அதன் ஒரு பகுதி குறைந்த அலைநீளங்களைக் கொண்ட வண்ணங்கள் சிதறடிக்கப்பட்டு வடிகட்டப்படுகின்றன, மீதமுள்ளவை ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற நீண்ட அலைநீளங்களைக் கொண்ட வண்ணங்கள், வளிமண்டலத்தின் வழியாக செல்கின்றன. இந்த ஒளி மீண்டும் முழுமையாக கிரகணம் அடைந்த சந்திரனின் மேற்பரப்பை நோக்கி ஒளிவிலகல் அடைகிறது, இதனால் அது சிவப்பு -ஆரஞ்சு நிற ஒளியில் ஒளிரும். இதை தான் காலப்போக்கில் ”இரத்த நிலவு ”என்று அழைக்கப்பட்டது.

இந்தியாவில் ஏன் காணமுடியவில்லை !?

முழு சந்திர கிரகணம் மார்ச் 13 ஆம் தேதி இரவு தாமாதமாகத் தொடங்கி மார்ச் 14 அதிகாலை வரை காணப்பட்டது. இந்திய நேரப்படி மார்ச் 14 ஆம் தேதி  நண்பகல் 12 மணி அளவில் தொடங்கி 1:30 மணி வரை தொடர்ந்தது. துரதிஷ்டவசமாக இந்தியாவில் நண்பகலில் தோன்றுவதால் இந்த ”இரத்த நிலவு” என கூறப்படும், சந்திர கிரகணத்தை இந்தியாவில் காண காணமுடியவில்லை.

இரத்த நிலவின் சிறந்த காட்சியைக் கொண்ட நகரங்கள்

வட அமெரிக்கா

  • அமெரிக்கா: நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ
  • கனடா: டொராண்டோ, வான்கூவர், மாண்ட்ரீல்
  • மெக்சிகோ: மெக்சிகோ நகரம், குவாடலஜாரா

தென் அமெரிக்கா

  • பிரேசில்: ரியோ டி ஜெனிரோ, சாவோ பாலோ
  • அர்ஜென்டினா: பியூனஸ் அயர்ஸ்
  • சிலி: சாண்டியாகோ
  • கொலம்பியா: போகோடா

மேற்கு ஐரோப்பா

  • ஸ்பெயின்: மாட்ரிட், பார்சிலோனா
  • போர்ச்சுகல்: லிஸ்பன்
  • பிரான்ஸ்: பாரிஸ், மார்சேய்

மேற்கு ஆப்பிரிக்கா

  • கானா: அக்ரா
  • நைஜீரியா: லாகோஸ்

நீங்கள் மேற்கண்ட நகரங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தால், இந்த அற்புதமான நிகழ்வை காண முன் வரிசையில் ஒரு இருக்கையைப் பெறுவீர்கள்.

சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது?

நீங்கள் கிரகணம் தெரியும் இடத்தில் இருந்தால், சிறந்த அனுபவத்திற்கு இந்த குறிப்புகளை பின்பற்றவும்.

  • தெளிவான காட்சிகளை காண நகர விளக்குகளை தவிர்த்து இருண்ட இடத்தில் இருந்து பார்க்கவும்.
  • சூரிய கிரகணத்தை போலன்றி, முழு சந்திர கிரகணத்தை காண எந்த விதமான சிறப்பு கருவியும் தேவையில்லை, சாதரண தொலைநோக்கி இருந்தாலே போதுமானது.
  • முழு கிரகணத்தின் நேரத்தில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்த சந்திர கிரகணம் எப்பொழுது?

மார்ச் 14 ஆம் தேதி நடைபெற்ற சந்திர கிரகணத்தை  தொடந்து, செப் 07 2025ஆம் தேதி நடைபெறும்  என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வருடத்தில் நடைபெறும் இரண்டு முழு சந்திர கிரகணம் மற்றும்  இரண்டு சூரிய கிரகணத்தையும் இந்தியாவில் இருந்து காண முடியாது என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.