
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில், சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கும் போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் கடுமையாக காயமடைந்த 2 பேர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர்.
பட்டாசு வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், வெடி மருந்து உராய்வு காரணமாக தீப்பிடித்து வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.