மூன்று பெண் குழந்தைகளை வெட்டிக் கொன்ற பின் தந்தை தற்கொலை

"Tragic incident where a father killed his three daughters before taking his own life."


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). வீடு கட்டும் நோக்கத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு போனதால், அவருக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த கோவிந்தராஜ், தனது மூன்று பெண் குழந்தைகள் பிரக்திஷா ஸ்ரீ (வயது 9), ரித்திகா ஸ்ரீ (வயது 7), தேவஸ்ரீ (வயது 3) ஆகியோரையும் வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது அவரது மனைவி பாரதி மற்றும் மகன் அக்னீஸ்வரன் இருவரையும் அவர் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் பூட்டி வைத்துவிட்டு இந்த கொடூரச் செயலுக்கு உட்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தந்தை தனது குழந்தைகளை கொன்று தற்கொலை செய்தது போன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் இரங்கலையும் ஏற்படுத்தியுள்ளது.