17 வயது மகளை  பாலியல் உறவுக்கு அழைத்த தந்தை கைது!

 நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர்,  20 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது மனைவி (45) ஊட்டியில் உள்ள காட்டேஜ் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.  இரண்டு மகன்கள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர் மற்றும் மூத்த மகளுக்கு 17 வயதாகிறது.

குடும்பத்தில் இளைய மகளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், மூத்த மகள் தனது கல்வியை கைவிட்டு,  மனநிலை பாதிப்படைந்த  சகோதரியை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தொழிலாளியின் மனைவிக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதால், சில நாட்களாக தாம்பத்தியத்தில் ஈடுபட மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த மறுப்பால் மனமுடைந்த கணவர், சம்பவத்தன்று தனது மூத்த மகளிடம், “உன் தாய்க்கு வயதாகி விட்டது; எனக்கு குளிரை தாங்க முடியவில்லை” என்று கூறி, மகளையே தாம்பத்தியத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

தந்தையின் இந்த வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி,  தனது தாயிடம் நேரடியாக கூறியதும், உடனே ஊட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த கொடூரமான சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.