திருப்பத்தூரில் போலி மருத்துவர் கைது!

"A fake doctor was arrested by authorities in Tirupathur for practicing without proper qualifications."


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் அனுமுத்து என்ற இளைஞர் வசித்து வந்தார். இவர் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார்.

இந்நிலையில், தன்னை ஆங்கில மருத்துவராக காட்டி சிகிச்சை அளித்து வந்ததாக அவர்மீது புகார் எழுந்தது. இதையடுத்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அனுமுத்து உண்மையில் மருத்துவப் படிப்பு எதுவும் படிக்காதவர் என்றும், போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்து, அவர் பயன்படுத்தி வந்த மருந்துகளுடன் அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.