
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக சீனாவின் பதிலடி நடவடிக்கையால் உலக வர்த்தக போர் நிலமை மேலும் தீவிரமடைந்துள்ளது
அண்மையில் உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியென்ற புதிய வரியை விதித்து உலக நாடுகளை திக்குமுக்காட செய்திருந்தார்
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துதிருந்தது
இதற்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மௌனம் காத்து வந்த சூழலில் சீனா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
அதாவது அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிராக அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரும் 10 தேதி முதல் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது
இதனால் கடுப்பான டிரம்ப், சீனா உடனடியாக தனது வரியை திரும்பப் பெறவில்லை எனில் பதிலுக்கு வரி விதிப்பேன் என்று மிரட்டியுள்ளார்.
அத்தோடு சீன பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரியை 9 ம் தேதி இரவு விதிப்பேன் எனவும் அமெரிக்க அதிபர் மிரட்டல் விடுத்து உள்ளார்
டிரம்பின் இந்த கருத்துக்கு சீனா வன்மையாக பதிலளித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னுடைய உரிமைகள் மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையில், சீனா உறுதியான மற்றும் தேவையான எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்.
அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தல்களை மேற்கொண்டு தவறு மேல் தவறு செய்து வருகிறது. அமெரிக்கா தனது விருப்பப்படி சீனாவை நடக்க வலியுறுத்தினால், சீனா இறுதி வரை போராடத் தயார்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் வர்த்தக போர், தற்போது உலக நாடுகள் மீதும் விழும் அடியாக மாறக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.