
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் நடந்த திடீர் சோதனையில், ஸ்கார்பியோ காரில் கடத்தி வந்த சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான இரு யானைத் தந்தங்கள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
காட்டுயானைகள் கொல்லப்பட்டு தந்தங்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட காரில் பயணித்தவர்கள் மற்றும் அந்த தந்தங்களை வாங்க காத்திருந்தவர்கள் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தங்களை எந்த பகுதியில் இருந்து எடுத்து வந்தார்கள், யாருக்கு விற்பனை செய்ய முயன்றார்கள், இதற்குப் பின்னால் உள்ள பெரிய வலையமைப்பு என்ன என்பது குறித்து வனத்துறை மற்றும் போலீசார் கூட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.