கள்ளக்காதலியை சேர்த்து வைக்காததால் உறவினரை அரிவாளால் வெட்டிய எலக்ட்ரீசியன்!

"Electrician assaults relative with a sickle after being denied shelter for his illicit lover."

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (42), திருப்பூரில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்ய வந்தபோது அங்கு இருந்த திருமணமான பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, அந்த பெண் கணவரை விட்டு பிரிந்து முருகனுடன் திருமணம் செய்து கொண்டு தனியாக குடியிருந்தார்.

ஆனால் சில காலத்திலேயே இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதையடுத்து முருகன், தனது கள்ளக்காதலியை மீண்டும் சேர்த்து வைக்குமாறு காதலியின் உறவினரான ராம்லட்சுமி (48) என்பவரிடம் உதவி கேட்டு சென்றுள்ளார் ஆனால் ராம்லட்சுமி அதை மறுத்ததால் ஆத்திரம் அடைந்த முருகன், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துச் சரமாரியாக வெட்டியுள்ளனார்

அதில் காயமடைந்த ராம்லட்சுமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.