விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி – ஆ.ராசா

A. Raja comments that Edappadi Palaniswami is on the verge of despair.


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
“செல்வப்பெருந்தகையை கீழ்தரமாக விமர்சித்து, நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரின் விசுவாசம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. வசவுவார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் பேசியிருக்கிறார்.

விரக்தியின் விளிம்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது” என ஆ.ராசா விமர்சித்தார்.