கனமழை எதிரொலி:  சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வட்டமடிப்பு

Overhead view of multiple passenger planes circling in a cloudy, stormy sky over a rain-soaked city, with airport lights visible below, symbolizing flight delays due to heavy monsoon rains in Chennai.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் பெய்து வரும் இந்த திடீர் மழை, வெப்பத்தில் தவித்த மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தாம்பரம் மற்றும் விமான நிலையம் அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. 

மேலும் கனமழையின் தீவிரத்தால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 8 இண்டிகோ விமானங்கள், பாதுகாப்பு கருதி தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். 

மழை சற்று தணிந்த பிறகே விமானங்கள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.