போதைப் பொருள் வழக்கு : கைதான நால்வருக்கு 4 நாள் போலீஸ் கஸ்டடி!

"Four individuals in drug case sent to police custody for four days after arrest."


நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தொடர்புடையதாக கூறப்படும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், பிரசாத், கெவின், ஜான் மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களை மேலும் விசாரணைக்காக 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


இதனைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு நால்வரையும் போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

அத்துடன் மற்றுமொரு போதைப் பொருள் வழக்கில் கெவினின் என்பவரின் நண்பர் இமானுவேல் ரோகன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை தொடர்ந்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.