வரதட்சணை கொடுமை: ராமநாதபுரத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு!

Image depicting the tragic case of a woman in Ramanathapuram who died by self-immolation due to dowry harassment.

வீரமாய்ச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், விவசாய தொழிலாளியான முனிஷ்வரனுடன் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவரது கணவர் முனிஷ்வரனும், மாமனார் அண்ணாதுரை (60) ஆகியோரும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமையால் மனமுடைந்த ரஞ்சிதா, நேற்று இரவு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அருகிலுள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீக்காய பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரண வாக்குமூலத்தில் மாமனார் அண்ணாதுரை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக ரஞ்சிதா குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் தொடர்ந்து பெண்கள் பாதிக்கப்படும் நிலை நீடிக்க, இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.