
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: “தமிழக அரசு முமொழிக் கொள்கையில் அரசியல் செய்யக்கூடாது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே மத்திய கல்வி நிதி மாநிலத்திற்கு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றியதாவது: “தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக வளர்ந்ததற்கு இருமொழிக் கொள்கையே காரணம். இந்தக் கொள்கையின் மூலம் படித்த தமிழர்கள் உலகின் பல துறைகளில் சாதித்து வருகின்றனர்” என்றார்.