
திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடல்நலக்குறைவால், அவர் பங்கேற்க இருந்த அனைத்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, பலர் எதிர்பார்த்தபடி மேடைக்கு உதயநிதி ஸ்டாலின் வரவில்லை. அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் ஆகியவை இருப்பதால், அவர் முகக்கவசம் அணிந்து மேடைக்கு கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தது கவனிக்கப்பட்டது.
முன்னதாக விமான நிலையத்திலிருந்தே அவர் தனியாக முகமூடி அணிந்து பயணித்ததும், உடல்நிலை குறைவு குறித்த தகவல்களை உறுதி செய்தது. தற்போது, மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில், அவர் சில நாட்கள் முழுமையான ஓய்வில் இருப்பார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜூன் 3ஆம் தேதி நடைபெறவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அதனையொட்டிய நிகழ்ச்சிகளிலும் துணை முதல்வர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.