முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார்  ஆய்வுக்கூட்டம்!

Chief Minister M.K. Stalin chairs a departmental review meeting today.


மக்கள் நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் உயர் மட்ட துறைசார் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனையில் நெடுஞ்சாலை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள், திட்டங்களின் முன்னேற்ற நிலை மற்றும் மக்கள் வரவேற்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் துறைகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்களை முதல்வருடன் பகிர்ந்துகொள்கின்றனர்.

மக்கள் நலத்திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் பணிப்பெறுதலுக்கேற்ப, இந்தக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.