
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கமல்ஹாசன், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் சனாதனம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், துணை நடிகரான ரவி பேட்டி அளித்து, கமல்ஹாசனின் “சங்கை அறுப்போம்” என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனை கண்டித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் துணைத்தலைவர் மவுரியா, நிர்வாகிகள் கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மயில்வாகனன், அர்ஜுனர் ஆகியோர், இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரவிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. போலீசார் இந்த புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.