
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்த அய்யம்மாள் என்பவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அய்யம்மாள், தனது மூத்த மகள் வழிப் பேத்தியான தேவியை மகன் பழனிவேலுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்.
குடும்பத்தில் நகைகள் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. அய்யம்மாள், நகைகளை தனது மகனுக்கும், மருமகளுக்கும் வழங்காமல், இரண்டாவது மகளுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மருமகள் தேவிக்கு கடும் மனவருத்தம் ஏற்பட்டது.
நேற்று இரவு, தூங்கிக் கொண்டிருந்த அய்யம்மாளை தேவி தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், அவர் நேரடியாகவே வேட்டவலம் காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்
இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.