
வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் செந்தமிழ் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அந்த பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் திருமணம் செய்வதாக ஆசை கூறி நெருங்கி பழகியுள்ளார் .
பின்னர் மாணவியை பலமுறை அழைத்துச் சென்று உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, செந்தமிழை கைது செய்தனர்.
அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.