வெற்றி முகத்துடன் சிஎஸ்கே !!

CSK with a Victorious Face

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்கப்பட்ட எல் சிளாசிக்கோ எனும் சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில், சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2025 3வது போட்டியான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி நேற்று(23/03/2025) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, முதலில் பேட்டிங் செய்யுமாறு மும்பை இந்தியன்ஸ் அணியை அழைத்தது.

இதையெடுத்து, ரோகித் சர்மா மற்றும் ரிக்கெல்டன்  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே தூக்கி அடிக்க முயன்று, சிவம் தூபேவிடம் கேட்சை கொடுத்து கோல்டன் டக்கில் அவுட் ஆகினார் ரோகித் சர்மா.

இதன் மூலம் ஐபிஎல்-லில் அதிக முறை(18) டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கும் சொந்தரகாரர் ஆனார் ரோகித் சர்மா.

நூர் அகமது வீசிய 10 ஓவரில் இறங்கி அடிக்க முயன்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சூர்ய குமார் யாதவை தனது மின்னல் வேகத்தின் மூலம் ஸ்டெம்பிங் செய்தார் தோனி.

இதனை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை கொடுத்து வெளியேறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

156 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கியது சிஎஸ்கே அணி.

தொடக்க ஆட்டர்களாக ரச்சின் ரவீந்தரா மற்றும் ராகுல் திருப்பாதி களமிறங்கினார்கள்.

தீபக் சஹார் வீசிய முதல் ஓவரில், 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் திருப்பாதி.

அதையெடுத்து களமிறங்கிய கேப்டன் ருத்துராஜ், அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இளம் வீரரான விக்னேஷ் தனது அபார பந்து வீச்சால் கேப்டன் ருத்துராஜ் உட்பட அடுத்தடுத்து 3 விக்கெட்டையை கைப்பற்றி, ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினார்.

ஒரு புறம் தொடர்ந்து விக்கெட்டை இழந்தாலும், மறுபுறம் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் ரவீந்தரா.

156 என்ற இலக்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி. இதன் மூலம் ஐபிஎல் 2025-ல் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே அணி.