நாமக்கலில் கிரேன் சாய்ந்து விபத்து – 2 பேர் பலி!

“A crane collapses near a hospital building in Namakkal, falling onto power lines and resulting in the death of two workers.”

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென கீழே சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பி மீது மோதியது.

இதனால் கிரேனின் முழு அமைப்பிலும் உயர்மின்னழுத்தம் பாய்ந்தது. அப்போது கிரேனின் பெட்டியில் இருந்த 3 பெயிண்டர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த ஒருவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரிதாபமான விபத்து அந்த பகுதியில் துயர நிலையை ஏற்படுத்தியுள்ளது.