மீண்டும் வேகமாக பரவும் கொரோனா: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

A health advisory issued for pregnant women as COVID-19 cases begin to rise again.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் புதிய வகை பரவலால் மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. 

சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பரவிய இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 498 புதிய கொரோனா தொற்று பரப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,364 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், இன்று மட்டும் நால்வர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்திலும் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 221 ஆகும்.

இந்த பரவல் சூழலில், பொதுசுகாதாரத் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பொதுமக்கள் முழு கவசம் (face shield) அணிவது கட்டாயம் இல்லையெனினும், முககவசம் அணிவது பாதுகாப்பிற்காக அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கர்ப்பிணிகள் காய்ச்சல், இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை சென்றடைய வேண்டும். மேலும், கூட்டம் அதிகமுள்ள இடங்களை தவிர்க்கவும், அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக, கர்ப்பிணிகள் மட்டுமல்லாது, முதியவர்கள் மற்றும் உடல் நலக்குறைவுள்ளவர்கள் முககவசம் அணிந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.