கழிவறைக்கு கக்கன், அண்ணா பெயர் வைத்ததால் சர்ச்சை!

கழிவறைக்கு கக்கன், அண்ணா பெயர் வைத்ததால் சர்ச்சை

கோவை மாநாகராட்சியின் பராமரிப்பில் உள்ள பொதுக் கழிப்பிடத்திற்கு மூத்த தலைவர்களான அண்ணா, கக்கன் பெயர் வைத்து பெரும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 95 வது வார்டான அண்ணா நகரில் சில்வர் ஜூபிலி என்ற பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் சமீபத்தில் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு. கழிப்பறையின் முன்பக்க சுவற்றில் திராவிட கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் பெயரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கக்கன் பெயரும் எழுதப்பட்டது.

பொதுக் கழிப்பிடத்திற்க்கு மூத்த தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது X பக்கத்தில் கருத்தை ஒன்று பதிவிட்டிருந்தார்.

அதில் பொதுக் கழிப்பிடத்திற்கு மூத்த தலைவர்களின் பெயர்களை வைத்து அவர்களை அவமதிக்கும் இந்த செயல் கண்டித்தக்கது, மேலும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பேருந்து நிலையங்கள், அரசு கட்டிடங்களுக்கெல்லாம் தனது தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரை விட மகத்தான தலைவர்கள் பெயரை, கழிப்பறைக்கு வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் நோக்கமே அன்றி வேறென்ன? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் அந்த கழிப்பிடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பெயர்கள் தான் எழுதப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தான் தற்போது  மீண்டும் இதே பெயர்கள் எழுதியதாக கூறினார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மாநகராட்சி  நிர்வாகம் அந்த பெயர்களை அழித்துள்ளது.